மஷூறா எழுதிய 'நதிகளின் தேசியகீதம்' கவிதைநூல் வெளியீட்டுவிழாவில் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்



வி.ரி.சகாதேவராஜா-
நாடறிந்த கவிதாயினி சம்மாந்துறை மஷூறா எழுதிய 'நதிகளின் தேசியகீதம்' எனும் கவிதைத்தொகுதி நூல் வெளியீட்டுவிழா சனிக்கிழமை(11) மருதமுனையில் நடைபெற்றது.

மருதமுனை அல் ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் எழுத்தாளர் எ.எம்.நௌசாட் தலைமையில் நடைபெற்ற இந்நூல்வெளியீட்டுவிழாவிற்கு, பிரதமஅதிதியாக தென்கிழக்குப்பல்கலைக்கழக முதன்மைப்பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் கலந்துசிறப்பித்தார்.

நயவுரையை பேராசிரியர் செ.யோகராசா நிகழ்த்த, நுண்பார்வையுரையை சத்தார் எம்.பிர்தௌஸ் நிகழ்த்தினார்.

தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் எஸ் எம் ஜெலீஸ் நிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுகாதாரநடைமுறைக்கமைவாக மட்டுப்படுத்தப்பட்டஅளவில் கலைஞர்கள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :