தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அனர்த்த ஆபத்து முகாமைத்துவம் சம்மந்தமான பிராந்திய மாநாடு இன்று (16 ஆம் திகதி) பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் தென்கிழக்குப் பல்கலைக்கழக அனர்த்த தவிர்ப்பு தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் அம்பாரை மாவட்ட அனர்த்த முகமைத்துவ நிலையத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம்.றியாஸ், இந்நிகழ்வின் இணைப்பாளர் கலாநிதி எம்.ஜீ.முகம்மட் தாரீக் உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள்;, விரிவுரையாளர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment