மருதமுனை 4பு hயனெடழழஅ முகாமைத்துவப் பணிப்பாளர் பதுறுஸ்மான் பஹத்ஸமான் சிறந்த கைத்தறி உற்பத்தி தொழில் முயற்சியாளருக்கான விருதைப் பெற்றார்.கிழக்கு மாகாண கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தொழில்; முயற்சியாளர்களுக்கான விருது வழங்கிய நிகழ்வு நேற்று(15-12-2021)புதன்கிழமை சாய்ந்தமருது லீமெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. .இதன் போதே பதுறுஸ்மான் பஹத்ஸமான் இந்த விருதைப் பெற்றார்.
கிழக்கு மாகாண தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.சி.எம்.சுனில் nஐயரத்ன தலைமையில்,அதிகார சபையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சினோஸ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வனவிலங்கு பாதுகாப்பு வனவள மேம்பாடு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கலந்து கொண்டார்.
அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பாரம்பரிய தொழில் முயற்சியாளர்கள் இருபது பேருக்கு விருது மற்றறும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஆரம்ப தொழில் முயற்சியாளர்களை ஊக்கவிக்கும் வகையில் மேலும் இருபது பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள்,மேலதிக மாவட்டச் செயலாளர்கள் அதிகார சபையின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment