இரண்டு இலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மையமாக கொண்ட பூரணத்துவமான வதிவிடம்சார் மனைப்பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி அருணலு வாழ்வாதார பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(20) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லத்தீப் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது சமுர்த்தி வாழ்வாதாரம் பெறும் குடும்பங்களுக்கான தையல் இயந்திரம் மற்றும் குளிர்சாதனப்பெட்டி என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் மேலும் கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப் பொருட்களை வழங்கிவைத்ததுடன் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார் மற்றும் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment