மருதமுனை அல்-மதீனா வித்தியாலய உதைப்பந்தாட்ட அணிக்கான மேலங்கி (சீருடை) தொகுதியை ஜப்பானில் வசிக்கும் மருதமுனை நண்பர்கள் வட்டத்தின் சார்பாக அதன் உறுப்பினர் எம்.எல்.கே.எம்.ஜம்சித் அவர்களால் பாடசாலையின் அதிபர் ஏ.குனுக்கத்துல்லாஹ் அவர்களிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது.
மாணவர்களுக்கு இவ்வாறான சீருடைகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை உண்டாக்குவதுடன் ஒரு ஊக்குவிப்பு நிலையை உருவாக்கி விளையாட்டின் மூலம் நல்லதொரு இளையோர் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இவ்வாறான முன்னெடுப்புக்கள் செய்யப்படுகின்றன என அமைப்பின் உறுப்பினர் தெரிவித்தார்.
இவ்வாறான செயற்திட்டங்கள் இதற்கு முன்னார் பெரியநீலாவணை அக்பர் வித்தியாலய மாணவர்களுக்கும், மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய மாணவர்களுக்கும் உதைப்பந்தாட்ட அணிக்கான மேலங்கி வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், விளையாட்டு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment