வரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூ மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சிஅம்மன் ஆலயத்திற்கான வைரவர் பரிவாரக்கோயிலுக்கான அடிக்கல்நடும் வைபவம் நேற்று ஆலயபரிபாலனசபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆலயவளாகத்தில் நடைபெற்றது.
ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் அடிக்கல்நாட்டுவைபவத்திற்கான சகல கிரியைகள் பூஜைகளை நடாத்தினார். ஆச்சாரியார் விநாயகமூர்த்தி(குமார்) ஆலயத்திற்கான நிலையம் எடுத்துள்ளதுடன் கட்டுமானவேலைகளையும் செய்யவுள்ளார்.
சுபநேரத்தில் பஞ்சதிரவியம் பொதிந்த பிராதான அடிக்கல்லை ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் நட்டுவைத்தார். தொடர்ந்து ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில், ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா , ஆலயநிருவாகசபை உறுப்பினர்கள், ஆலயத்திற்குவருகைதந்த அம்பிகை அடியார்கள் பலரும் அடிக்கற்களை நட்டனர்.
புதிய ஆலயத்திற்கான ஆவர்தன மகா கும்பாபிஷேகப்பெருவிழா எதிர்வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் ஆறாம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment