இந்துக்கள் அனுஸ்டிக்கும் சிவவிரதங்களுள் ஒன்றான திருவெம்பாவை விரதத்தின் இறுதிநாள் நிகழ்வான திருவாதிரை தீர்த்தோற்சவம் நேற்று (20)திங்கள் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று 10மணியளவில் ஆலயத்தில் விசேட திருவாதிரை பூஜையும் உள்வீதியுலாவும் இடம்பெற்று பக்தர்களுக்கு தர்ப்பை வழங்கி கிரியைகள் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றன.
கண்ணகை அம்மன் ஆலய தர்மகர்த்தா ப.இராசமோகன் சங்கல்பத்தில் இருந்து தீர்த்தத்திற்கான கிரியைகள் நடாத்திவைக்கப்பட்டது.பின்பு ஆலயதீர்த்தக்கிணற்றில் முறைப்படி தீர்த்தமாடப்பட்டது.
தொடர்ந்து பக்தர்களும் தீர்த்தமாடினர். இதன்போது இந்துசமயவிருத்திச்சங்கத்தின் நடராஜப்பெருமான் ஊர்வலபக்தர்களும் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டனர்.
கடந்த ஒன்பது தினங்களாக ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றுவந்த திருவெம்பாவை விரத பூஜையானது நேற்று (20) ஆலய தீர்த்தக்கிணற்றில் திருவாதிரைதீர்த்தமாடுவதுடன் நிறைவடைந்தது.
0 comments :
Post a Comment