நாவிதன்வெளி பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான வீரச்சோலை கிராம ஒருதொகுதி வசதியில்லாத மக்களுக்கு கனடாவாழ் மதியழகனின் நிதியுதவியில் உலருணவுநிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிவாரணம் வழங்கும் வைபவம் நேற்று காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் நடைபெற்றது.
; கனடாவில் வசிக்கும் இலங்கையரான சமுகசெயற்பாட்டாளர் த.மதிழயகன் கடந்தவாரம் இந்தப்பிரதேசமெங்கும் விஜயம்செய்திருந்தார். அவரிடம் பேசி இதற்கான ஏற்பாட்டை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் சமுகசெயற்பாட்டாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மேற்கொண்டிருந்தார்.
சமுகசெயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜாவும் கலந்துகொண்டு நிவாரணங்களை வழங்கிவைத்தார்.
பிச்சசைம்பளம் பெறுகின்ற சுமார் 100குடும்பங்கள் இப்nஅபாதியினை பெற்றுக்கொண்டனர்.
0 comments :
Post a Comment