அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், 20.12.2021 அன்று காலை 8 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் 20.12.2021 அன்று சில வைத்தியர்கள் கடமையில் ஈடுப்பட்டிருந்தாலும், சில வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் இங்கு சிகிச்சைக்காக வருகை தந்த பொதுமக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை தாதிமார்களாலும் வைத்திய கடமை மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர்.
மேலும் வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகியிருந்தனர்.
நுவரெலியா, அட்டன் டிக்கோயா, பொகவந்தலாவ, மஸ்கெலியா, கொட்டகலை, லிந்துலை, டயகம, அக்கரப்பத்தனை, உடபுஸ்ஸலாவ போன்ற வைத்தியசாலையிலும் இவ்வாறான ஒரு நிலைமையை எம்மால் காணக்கூடியதாக இருந்தது.
0 comments :
Post a Comment