காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர்
வி.ரி.சகாதேவராஜா-காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவு கடந்த மூன்று தினங்களில் கொட்டும் மழைக்கு மத்தியில் 1600பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றி சாதனை படைத்துள்ளது.
நேற்றையதினம்(14)செவ்வாய்க்கிழமை சுகாதாரவைத்தியஅதிகாரி பணிமனையிலும் நேரு நிலையத்திலும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
குறைந்த ஆளணி ஊழியர்களுடன் நிறைவானசேவையை செய்துவரும் காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான குழுவினர் பொதுமக்களால் பாராட்டப்பட்டனர்.
கல்முனைப்பிராந்தியத்தில் காரைதீவு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுதான் இப்படி அதிகூடிய தடுப்பூசிகளை ஏற்றியிருப்பதாகத் தெரிகிறது.
காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட அர்ப்பணிப்பான சேவை காரணமாக கடந்த காலங்களிலும் முதலிரண்டு தடுப்பூசிகளை ஏற்றியிருந்தது.
காரைதீவு சுகாதாரபிரிவுக்குட்டபட்ட பிரதேசத்தில் 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த சனிக்கிழமை முதல்; பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுவருகிறது.
முதல்நாளில் 600பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி 3இடங்களில் வழங்கப்பட்டதாக காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் தெரிவித்தார்.
காரைதீவு சுகாதாரவைத்தியஅதிகாரி அலுவலகம் மற்றும் விபுலாநந்தா சண்முகா ஆகிய இருபாடசாலைகளிலும் சனிக்கிழமையன்று விசேட தடுப்பூசி நிலையங்களை நிறுவி அதனூடாக இந்த 3ஆம் தடுப்பூசியை வழங்கப்பட்டது.
எனவே அடுத்துவரும்நாட்களில் பொதுமக்கள் அனைவரும் இதற்காக பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் எமது மாகாணத்தை கொரோனாவிலிருந்து முற்றாக விடுவிக்க உதவுமாறும் கேட்டுக்கொள்கிறேன். என்றார்.
0 comments :
Post a Comment