கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ஐந்து போட்டிகளில் பங்குபற்றி ஐந்து தங்கப்பதக்கங்களை வென்று அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரரான ஹனீபா சபீர் அலியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (14) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கத்தில் இடம்பெற்றது.
அண்மையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கெடுத்த சபீர் அலி ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றதுடன், இவ்வாண்டின் "Most Outstanding Player 2021" மற்றும் "Eastern Best Athlete 2021" (கிழக்கின் சிறந்த மெய்வல்லுனர்) போன்ற இரு மகுட விருதுகளையும் சூடிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மாகாண மெய் வல்லுனர் போட்டிகளில் கனதியான சாதனைகள் படைத்து அக்கரைப்பற்று மண்ணுக்கு மென்மேலும் கீர்த்தியும், புகழும் சேர்த்த சபீர் அலி அவர்களை ஒட்டுமொத்த அக்கரைப்பற்று சமூகம் சார்பாக முதன் முதலில் பாராட்டி வாழ்த்தி,கௌரவிப்பதில் தாம் மிகுந்த பெருமிதமும்,மகிழ்ச்சியும் அடைவதாக மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.
குறித்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள்,மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment