காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வெற்றி.



நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தவிசாளர் கி.ஜெயசிறிலினால் 46 வது சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது. இவ்வரவு செலவு திட்டத்தினை தவிசாளருடன் இணைந்து பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எச்.எம்.இஸ்மாயில், ச.நேசராஜா, த.மோகனதாஸ், சி.ஜெயராணி, ச.சிசிகுமார், என்.எம்.றணீஸ் ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர். உப தவிசாளர் ஏ.எம்.ஜஹீர், உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.பஸ்மீர், எம்.ஜலீல், கே.குமாரசிறி, கே. ஜெயதாசன் ஆகியோர் எதிர்ப்பாக வாக்களித்தனர்.

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து பயனிக்கும் காரைதீவு சபை மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இரு உறுப்பினர்கள் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர் ஒவரின் ஆதரவுடன் வரவு செலவு திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி வாகை சூடியது. இதன் போது கருத்து தெரிவித்த தவிசாளர் காரைதீவு பிரதேச சபையின் பாதீடு வெற்றியானது தமிழ் முஸ்லீம் இனங்களின் வெற்றி என குறிப்பிட்டார்.

12 உறுப்பினர்களை கொண்ட இச்சபையில் 7 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வரவு செலவு திட்டத்திற்கு வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :