கல்முனை வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளராக கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் என்.எம்.மலீக் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தரான என் எம் எம்.மலீக். கல்முனை வலயத்தின் திறமையான நிர்வாகிகளில் ஒருவர்.
கல்முனை வலயத்தில் ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றிய இவரின் இந்த புதிய நியமனத்தின் வாயிலாக சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் கல்வியில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
குறித்த நியமனம் 2021.12.15 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment