கறுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022ம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது- எரான் விக்ரமரத்ன.



ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-
றுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022ம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது என்ற தகவலும் எமக்கு கிடைத்துள்ளது.
இந்நாட்டை வன்மேன் ஷோவினால் மீட்டெடுக்க முடியாது. ICUவில் ஒப்படைக்கட்பட்ட நிலைக்கு நாடுதள்ளப்பட்டுள்ளது. இதற்கு ராஜபக்சவினரின் பொதுஜன பெரமுன அரசாங்கமே காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சு, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகை அமைச்சு, நிதி மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு, சமுர்த்தி உள்ளக பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி ராஜாங்க அமைச்சுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில்:-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியை பொறுப்பெடுத்ததிலிருந்து நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன. நாட்டின் பொருளாதாரமும் சரிந்து விட்டது. மக்களை வரிசையில் நிற்கவைத்து விட்டீர்கள். நாடே முழுமையாக நிதி நெருக்கடிக்குள் வீழ்ச்சிகண்டு விட்டது. வரவு செலவுத் திட்டத்தை கூட கடனில் கையாள வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் நாடு பாரிய கடன்களில் சிக்க ஆரம்பித்தது. அப்போதைய நிதியமைச்சர் இன்று பிரதமர். அப்போதைய மத்திய வங்கி ஆளுநரே இன்றும் ஆளுநராக உள்ளார். இவர்களினால் மீண்டும் அதே பயணத்தை மட்டுமே முன்னெடுக்க முடியும்.
உலகிலுள்ள நாடுகளில் தனது அந்நியச் செலாவணி கையிருப்பு $1 Billionக்கும் குறைவாக கொண்டுள்ள நாடொன்று இருக்கும் என்றால் அது இலங்கையாகும். அந்தளவு மோசமான நிலைக்கு நாடு சென்றுள்ளது. இந்நிலையில் எந்த நாடும் எமக்கு கடன் கொடுக்காது. அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையே இன்று ஏற்பட்டுள்ளது

அரசாங்கத்தில் இருக்கும் ஒரு சிலர் நாட்டின் நிலைமைகளை விமர்சித்துவிட்டு இப்போது பட்ஜெட்டுக்கு ஆதரிக்க முடியுமா? இந்த பட்ஜெட்டை ஆதரித்தால் நாடு வேகமாக நாசமடையும். அவ்வாறான திட்டங்களே இந்த பட்ஜெட்டில் உள்ளது. குறுகிய காலத்திட்டங்களை சமர்ப்பித்து நாட்டின் நிதி நெருக்கடியை கையாள முடியாது. நாடு இதனை தாண்டிய பாரிய
பொறிக்குள் சிக்கிக்கொண்டுள்ளது. எமது பிணைகளைக் கூட பெற்றுக்கொள்ள எவரும் தயாரில்லை. அப்படியே பெற்றுக் கொள்ள வந்தாலும் அவர்கள் கறுப்புப்பண வியாபாரிகள் மட்டுமே முன் வருவார்கள்.
அவ்வாறான கறுப்புப் பணக் கோஷ்டியொன்று 2022ம் ஆண்டில் நாட்டை ஆக்கிரமிக்கப்போகின்றது என்ற தகவலும் எமக்கு கிடைத்துள்ளது. இந்த நாட்டை "வன் மேன் ஷோவினால் மீட்டெடுக்க முடியாது. நாடு அவசர சிகிச்சை பிரிவில் ஒப்படைக்கப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே நாட்டை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :