ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனை தொடர்பான சம்பவங்களை பொறுப்புடன் செய்தி அறிக்கையிடல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் வகிபாகமும் சேவைகளும் பற்றிய ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் பயிற்சிப்பட்டறை கடந்த 6ஆம்இ 7ஆம் திகதிகளில் புலம் பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு ஆகியன இணைந்து கோல்பேஸ் கோட்டலில் நடாத்தியது.
ஐ.ஓ.எம். அமைப்பின் சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் இம்தாத் பஸர் தலைமையில் இடம் பெற்ற பயிற்சிப்பட்டறையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலத்திரணியில்இ அச்சு மற்றும் இணையத்தள ஊடகவியலாளர்கள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக பங்குபற்றியிருந்தனர்.
சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்பட்ட இந்தப் பயிற்சிப்பட்டறை கொழும்பில் முதல் முதலாக தமிழ் மொழியில் நடாத்தப்பட்டதால் பல தமிழ் மொழி மூலமான ஊடகவியலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறந்த பலனைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் ரி சேர்ட் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment