மீராகேணி பிரதான வீதியானது நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாது கவனிப்பாரற்று இருந்தது இதனால் பொதுமக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இதனைக் கவனத்தில் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிராமிய வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமால் லான்சா அவர்களிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் 8 கோடியே 30 இலட்சம் செலவில் 02 KM காபட் வீதியும் 1KM வடிகானும் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (02) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களும், பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத்
உதவி திட்டமிடல் அதிகாரி சிஹானா,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களான் எம்.நசீர்,எம். ஜாவாத், மற்றும் முன்னாள் நகரசபை தவிசாளர். எம்.சி கபூர், எம்.ஐ தஸ்லிம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம், விளையாட்டு கழக உறுப்பினர்கள், இன்னும் பல முக்கியஸ்தகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment