Laparoscopic Surgery- கமரா மூலம் பார்த்து செய்யும் சத்திரசிகிச்சை.



ழமையான சத்திரசிகிச்சையின் போது வயிற்றில் அகற்றப்படும் உறுப்பின் அளவை விட பெரிதான வெட்டு ஒன்றை ஏற்படுத்திய பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும்.
Laparoscopy இன் போது முதலில் வயிற்றில் கார்பன் டை ஆக்சைட் வாயு நிரப்பப்படும்.அதன் பின்னர் வயிற்றில் 1cm அளவான வெட்டு இடப்பட்டு அதன் மூலம் சிறிய கமரா கருவி செலுத்தப்படும். பின்னர் வயிற்றிலுள்ள உ றுப்புகளை அதன் மூலம் அவதானித்து மேலும் 2 அல்லது 3 அரை சென்றிமீட்டர் அளவான துளைகள் இடப்பட்டு சத்திர சிகிச்சை உபகரணங்கள் செலுத்தப்பட்டு நோயுள்ள உருப்புகளில் சத்திர சிகிச்சை செய்யப்படும்.
இதன் மூலம் பல்வேறு விதமான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியும்.
பெண்நோயியலை பொருத்தவரையில் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் Laparoscopy மூலம் செய்யலாம்.
உதாரணம்.
1. தொடர்ச்சியான வயிற்றுவலி காணப்படுபவர்களில் ஏனைய பரிசோதனைகள் மூலம் என்ன காரணத்தால் ஏற்படுகின்றது என்பதை அறிய முடியாதவிடத்து காரணத்தை கண்டறியும் நோக்கத்தில் செய்யலாம் - Diagnostic Laparoscopy
2. Endometriosis - இதுவே இந்நோயை கண்டறியவும் , அதை முழுமையாக குணப்படுத்தவும் மிகச்சிறந்தமுறை
3. சூலகங்களில் ஏற்படக்கூடிய கட்டிகளை அகற்றுதல்
4. கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகளை அகற்றுதல்
5. குழந்தைப்பாக்கியம் தாமதிக்கும் போது அதற்கான காரணத்தை கண்டறிந்து குணப்படுத்துவதற்கான சிறந்தமுறை
6. கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை
7. இருமல் அல்லது தும்மலின் போது சிறுநீர் வெளியாவதை குணப்படுத்துவதற்கான சிறந்த சத்திரசிகிச்சை முறை
8. கர்ப்பப்பைக்கு வெளியில் கருத்தரிப்பின் (Ectopic pregnancy) அகற்றுதல்
இதன் நன்மைகள்
1. வயிற்றில் சிறு காயம் என்பதால் வலி மிகக்குறைவு
2. குறைந்தகாலத்தில் வழமையான வேலைகளுக்கு திரும்பக்கூடியதாயிருக்கும்.
3. மிகத்தெளிவாகவும் துல்லியமாகவும் கமராவில் பார்த்துக்கொண்டு செய்வதால் பக்கவிளைவுகளும் , சத்திரசிகிச்சையின் போது இரத்தம் வெளியாகும் அளவும் குறைவு.
4. சத்திரசிகிச்சை செய்யும் இடத்தை குறிப்பாக பார்த்து அவ்விடத்தில் மட்டும் சத்திரசிகிச்சை உபகரணங்களை உபயோகிப்பதால் நீண்டகாலரீதியில் வரக்கூடிய வயிற்றுவலி, ஹேர்னியா என்பன மிகக்குறைவு.
5. சிறிய தழும்பு.
6. குறிப்பாக அதிக உடற்பருமனுள்ளவர்களில் காயங்களில் ஏற்படக்கூடிய infections மிகக்குறைவு.

Dr A.C.Mohammed Musthaq
MBBS MD MRCOG MSLCOG
Resident Consultant Obstetrician and Gynecologist
National Hospital Kandy
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :