இன்று காரைதீவில் அறநெறிப் பாடசாலை மாதிரி நூலக அங்குரார்ப்பணவிழா.வி.ரி.சகாதேவராஜா-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்றிட்டத்தின்கீழ் முன் மாதிரியான அறநெறி நூலக அங்குரார்ப்பண வைபவம் இன்று(16)செவ்வாய்க்கிழமை காரைதீவில் நடைபெறவுள்ளது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் காரைதீவு விபுலாநந்தா மணி மண்டபத்தில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் துணைமேலாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்த ஜீ மஹராஜ் கலந்துசிறப்பிக்கவுள்ளார்.கெளரவ அதிதியாக அம்பாறைமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் கலந்துகொள்வார்.

சிறப்பு அதிதிகளக சி.ஜெகராஜன்(பிரதேச செயலாளர் – காரைதீவு) சோ. ரங்கநாதன்(பிரதேச செயலாளர் - நாவிதன் வெளி) த.கஜேந்திரன் (பிரதேச செயலாளர் - திருக்கோவில் ) வி. பபாகரன்(பிரதேச செயலாளர் - ஆலையடிவேம்பு) ரி.ஜே.அதிசயராஜ் (பிரதேச செயலாளர் - கல்முனை வடக்கு) ந.நவநீதராஜா(பிரதேச செயலாளர் - லாகுகல) கி.ஜெயசிறில்(தவிசாளர் - பிரதேச சபை – காரைதீவு) செ. புவனேந்திரன் (வலயகல்வி பணிப்பாளர் கல்முனை) எம்.எஸ்.எம் ரஷ்ஷான்(பிரதேச செயலாளர் - இறக்காமம்). எஸ்.எம்..ஹனீபா(பிரதேச செயலாளர் - சம்மாந்துறை.) எம்.ஜ.பிர்னாஸ்(உதவிப் பிரதேச செயலாளர் – பொத்துவில்.) சோ.ஸுரநுதன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருக்கோவில்) அஹமட் ஷாபிர்(பிரதேச செயலாளர் – அட்டாளச்சேனை)வி.ரி. சகாதேவராஜா(உதவிக் கல்விப் பணிப்பாளர் சம்மாந்துறை) வெ.ஜெயநாதன் (தலைவர் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றம் காரைதீவு) ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

விழாவில் நந்திக் கொடியேற்றம் சுவாமி விபுலாநந்தர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தல் புஸ்பாஞ்சலி தினசரி நூலகம் - அங்குரார்ப்பணம் இந்து சமய அறநெறிப் பாடசாலைகளுக்கான முன்மாதிரி நூலக - அங்குரார்ப்பண நிகழ்வும் கண்காட்சியும் அறநெறிப் பாடசாலை நூலகத்திற்கான நூல்கள் வழங்குதல் அறநெறிச் சாரம் வானொலி நிகழ்வில் ஆக்கத்திறன் ஆளுமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு நூல்கள் வழங்குதல் அறநெறிச்சார வானொலி நிகழ்வில் மாணவ நேயராகப் பங்குபற்றி விடை எழுதிய மாணவர்களுக்கு நூல் வழங்குதல் என்பன நடைபெறவிருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :