இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நினைவு வளாகம் திறப்புவிழாவும் சுவாமி நீலமாதவானந்தஜீ எழுதிய சுவாமியின் இருநூல்கள் வெளியீட்டுவிழாவும்.காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா-
லகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளரின் நினைவு வளாகத் திறப்புவிழாவும், மட்டு.இ.கிமிசன் துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ எழுதிய சுவாமிகள் தொடர்பான இரு ஆய்வுநூல்கள் வெளியீட்டுவிழாவும் இன்று(17) புதன்கிழமை கல்லடியிலுள்ள சுவாமியின் புனரமைக்கப்பட்ட சமாதி அமைந்துள்ள மணிமண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளன.
வரவேற்புரையுடன்கூடிய அறிமுகவுரையை துணை மேலாளர் ஸ்ரீமத்சுவாமி நீலமாதவானந்தர் ஜீ நிகழ்த்த, நூல்கள் தொடர்பான அறிமுகவுரையை தென்கிழக்குபல்கலைக்கழக சிரேஸ்விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரகுவரன் நிகழ்த்தவுள்ளார்.
சிறப்புரைகளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வே.ஜெகதீசன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்துவார்கள்.
இலங்கை இராமகிருஸ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ மஹராஜ், இந்துசமய கலாசார திணைக்களம் பதிப்பித்த சுவாமி நீலமாதவாகந்தா ஜீயின் இரு நூல்களை வெளியிட்டுவைத்து ஆசியுரையை நிகழ்த்தவுள்ளார். மட்டு.இ.கிமிசன் மேலாளர் ஸ்ரீமத்சுவாமி தக்ஷயானந்தா ஜீ நன்றியுரையாற்றுவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :