கினிகத்தேனையில் விபத்து ஒருவர் உயிரிழப்புநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
கினிகத்தேனை பகத்துல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கிரிய பகுதியை சேர்ந்த 46 வயதுடைய விஜயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அட்டனிலிருந்து மாத்தளை நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தபான திருத்தப்பணி பஸ்ஸும் நாலப்பிட்டியிலிருந்து பிலியந்தலை பகுதிக்கு சென்ற கனரக லொறியொன்றுமே பகத்துல பாலத்தில் 11.11.2021 காலை 6.45 மணியளவில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமுற்ற லொறியின் சாரதி படுகாயமடைந்து நாலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :