கம்பஹா - நால்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக, மகளிர் பிரதான பொலிஸ் பரிசோதகர், இன்று (11) கடமைகளை பொறுப்பேற்கிறார் மினுவாங்கொடை நிருபர்-
களிர் பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். ஐ. காஞ்சனா சமரகோன், கம்பஹா - நால்ல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமனம் பெற்று, இன்று (11) மாலை 4.00 மணிக்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்தப் புதிய பொலிஸ் நிலையத்தை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர திறந்து வைக்கவுள்ளார்.
மகளிர் பிரதான பொலிஸ் பரிசோதகர் காஞ்சனா சமரகோன், மாவனல்லை - ஹெம்மாத்தகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், கோகாலை மகளிர் மகா வித்தியாலயத்தில் தனது கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளாா்.
1997 ஆம் ஆண்டு மகளிர் உப பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட இவர், கம்பஹா, நிட்டம்புவ, மீரிகம, சிலாபம் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணி புரிந்துள்ளாா்.
இவரது கணவர், இலங்கை பொலிஸ் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் பிரதான பொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வருகிறார். அத்துடன் இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாருமாவாா்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் 24 வருடங்களுக்குப் பின், காஞ்சனா சமரக்கோனுக்கு அரச சேவைகள் ஆணைக்குழுவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :