மடத்தடி மீனாட்சி அம்மனுக்கு கனடாவிலிருந்து அன்பளிப்புவி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி மாட்டுப்பளை ஸ்ரீ மீனாட்சிஅம்மனின் புதிய ஆலய முகப்பு பிரதான அம்மன் திருவுருவச்சிலையை நிருமாணிக்க கனடாவிலிருந்து அம்மன்பக்தர் ஒருவர் நிதி அன்பளிப்புச் செய்துள்ளார்.

நீண்டகாலத்திற்குப்பிறகு புதிய தலைவர் கி.ஜெயசிறிலின் வருகையைத்தொடர்ந்து, ஆலய புனருத்தாபனப்பணிகள் கிரமமாக இடம்பெற்றுவருகின்றமையை அவதானித்த அவர் அம்மன்சிலைக்காக 1லட்சருபாவை வழங்கினார்.

கனடாவில் வாழும் பரோபகாரி அசோகன் தனது மகள் அக்சிதாவின் பெயரில் வழங்கிய இவ்வன்பளிப்பை, காரைதீவிலுள்ள தனது உறவு திருமதி கீதா ஜெயசிறில் நேற்று ஆலய சந்நிதானத்தில் ஆலய நிருவாகத்திடம் கையளித்தார்.

கனடா பரோபகாரி திரு.அசோகன் கடந்த கொரோனாகாலகட்டத்தில் லட்சக்கணக்கான நிதியை வழங்கியதோடு, புலம்பெயர்தேசங்களிலிருந்து ஏனையவர்களிடமிருந்தும் நிதியுதவி வழங்கி பெற்று தாயகஉறவுகளின் பசியைபோக்கியவராவார்.

ஆலயவளாகத்தில் நிருமாணிக்கப்பட்டுள்ள புதிய மீனாட்சிஅம்மனாலயத்தின் மகாகும்பாபிசேகத்தையொட்டி திருப்பணிகள் மிகவேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற சமகாலத்தில் பரவலாக அம்மன் பக்தர்கள் தத்தமது காணிக்கைளை செலுத்திவருகின்றனர்.

ஆலய மகாகும்பாபிசேகம் ,பெரும்பாலும் எதிர்வரும் தைமாத இறுதியில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :