தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி .அஸ்லம் சஜா எழுதிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும் நூல் வெளியீடு நாளைஎம்.ஐ.எம்.அஸ்ஹர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.அஸ்லம் சஜா எழுதிய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளும் சவால்களும் (Sustainable Development Goals and Challenges ) நூல் வெளியீடு நாளை (20)சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
நூலாசிரியர் கலாநிதி ஏ.எம்.அஸ்லம் சஜா சமூக அபிவிருத்தி , மனிதாபிமான உதவி , திட்ட முகாமைத்துவம் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற துறைசார் விடயங்களில் 10 வருடத்திற்கு மேல் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.இவை தொடர்பான 15 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இடம்பெற்ற மாநாடுகள் மற்றும் கலந்துரையாடல்களில் பங்கு பற்றியுள்ளதோடு , பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை சர்வதேச சஞ்சிகைகளில் பிரசுரித்துள்ளார்.
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுடன் தொடர்பான துறைகளில் பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் ஒரு புலமையாளராகவும் வளவாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் அக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளராகவும் பல வருடங்கள் சேவையாற்றியுமுள்ளார்.
சாய்ந்தமருது இயற்கயை நேசிக்கும் அமைப்பு நூல் வெளியீட்டுக்கான சகல ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :