கால்நடைகளின் மேய்ச்சல் பகுதியில் பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற கால்நடைகளுக்கு ஆபத்தான கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதால் அதனை உட்கொள்ளும் கால்நடைகள் ஆபத்துக்களை எதிர்நோக்கி வருவதாக கால்நடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட நாவலடி பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலங்களிலே இவ்வாறான நாசகார செயல்கள் இடம்பெற்று வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதிகளில் சிலர் உணவுக் கழிவுகளை பொலித்தீன் பைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களிலும் வீசிச் செல்கின்றனர்.
அத்துடன், பயன்படுத்திய முகக் கவசங்களையும் குறித்த பகுதியில் வீசிச் செல்கின்றனர். இதனை எமது கால்நடைகள் உட்கொள்வதால் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகின்றன.இதனால் நாங்கள் பாரிய நஷ்டங்களை எதிர்நோக்குகிறோம்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி மேய்ச்சல் பகுதியில் கழிவுப் பொருட்கள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment