தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த புதிய வீரியமிக்க ஒமீக்ரோன் ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை திரிபடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல் திறன் குறைவு என சொல்லப்படுகிறது.
உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த வகை கொரோனாவை கவலைக்குரிய திரிபாக வரிசைப்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவை தவிர்த்து UK, ஹொங்கொங், போட்ஸ்வானா, இஸ்ரேல், ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் கால் பதித்துள்ளது. இதுவரை 60 பேருக்கு மேல் இந்த உருமாறிய வைரஸ் பாதித்திருக்கிறது.
ஒமீக்ரோன் வைரஸின் அச்சத்தால் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதேபோன்று உலகமே தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போதுள்ள தடுப்பூசிகள் புதியவகை ஒமீக்ரோன் ரக கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்குமா? என்பது குறித்து அந்தந்த தடுப்பூசி நிறுவனங்கள் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது எங்களது தடுப்பூசியை செலுத்தியவர்கள் ஒமீக்ரோன் வைரஸால் தப்பிக்குமா? என தெரியவில்லை என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பைசர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒமீக்ரோன் வைரஸ் தற்போதுள்ள எங்கள் தடுப்பூசியில் இருந்து தப்பிக்குமா? என எங்களுக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் ஒமீக்ரோன் வைரஸுக்கு எதிராக 100 நாட்களில் புதிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து அனுப்புவோம்’ என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment