கல்விச் சமூகத்தின் முத்தொன்றை இழந்து விட்டோம்.-பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட்எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
ட்/மம/மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அதிபர் ULM.புஹாரி (சேர்) இன்று காலை மரணித்து விட்ட செய்தி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தேன்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன்
மீராவோடை பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்னின்று உழைத்தவர்களில் மர்ஹூம் ULM.புஹாரி சேர் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
மீராவோடை அல்ஹிதாயா மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துதல் தொடர்பாகவும் தனது பாடசாலை தேவைகள் தொடர்பில் அரசியல் வாதிகளோடு மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர் அவருடைய இழப்பு கல்விப்புலத்தில் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்

அன்னாருடைய மறுமை வாழ்வு சிறப்பாக அமைந்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் எனற உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க வேண்டும் என அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.மேலும் அவரது மரணத்தினால் கவலையுற்றி இருக்கும் அன்னாருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் மன அமைதியை இறைவன் வழங்க பிரார்த்திக்கின்றேன்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :