வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்ட்டு ஆரம்ப கால உரிமையாளர்களிடம் கையளிப்புமுனீரா அபூபக்கர்-
டக்கு மற்றும் கிழக்கில் மக்களுக்கு கண்ணிவெடி அகற்றப்பட்ட நிலங்களை ஆரம்பகால உரிமையாளர்களிடம் வழங்கும் வைபவம் கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த ஆகியோரின தலைமையின் கீழ் அண்மையில் நடைபெற்றது.

அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர், மாண்புமிகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் ஆலோசனைக்கேற்ப கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் கீழ் மீள் குடியேற்றப் பிரிவின் 'கண்ணிவெடி நடவடிக்கைக்கான தேசிய மையம்' இனால் கண்ணிவெடி அகற்றும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதன் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி, கிளாலி மற்றும் அல்லிப்பளை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 270 குடும்பங்கள் வசிப்பதற்காக 2,186 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது 87,290 மிதி வெடிகளும், 196,985 தோட்டாக்களும் ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்காக இலங்கை இராணுவம் மட்டுமல்லாமல் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம், மக் நிறுவனம், டேஸ் நிறுவனம், சார்ப் நிறுவனம் போன்ற சர்வதேச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி வழங்கி வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :