சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம், இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படைகள் மீறப்படுகின்றன மனோ தலைமையில் தமுகூ இந்திய அரசிடம் தெரிவிப்புசிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும். ஆனால், பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று தொழில்களுக்கான காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. 60 வருடங்களுக்கு பிறகும் நிலவுகின்ற இந்நிலைமை குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள். இம்மக்கள் தொடர்பில் இந்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

13ம் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும். மாகாணசபை தேர்தல்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களுடன் மத்திய, மேற்கு, ஊவா, சப்ரகமுவ மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடைபெறவேண்டியமை நமக்கு அவசியமானதாகும். அதேபோல், 16ம் திருத்தமும் முழுமையாக அமுல் செய்யப்பட்டு, தமிழ் மொழியின் அந்தஸ்து உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி.ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் உள்ளடங்களாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வாதன் ஷிருங்லாவை சந்தித்து உரையாடியது. இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் உட்பட தூதரக அதிகாரிகள் இருந்தனர்.

16ம் திருத்தம் முற்று முழுதாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருத்தத்தின் மூலமாகவே தமிழ் மொழியும் ஒரு நிர்வாக மொழியாக, கல்வி மொழியாக, நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.

13ம் திருத்தம், 16ம் திருத்தம் இரண்டுமே இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே இலங்கை அரசியலமைப்பில் அரங்கேறியது. ஆகவே இவை பற்றி இந்திய அரசுக்கு கடப்பாடு இருப்பதாக நாம் நம்புகிறோம்.

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் சாராம்சத்தின்படி இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும்.

இலங்கையின்மிக பின் தங்கிய பிரிவினரான பெருந்தோட்டங்களில் வாழும் தமிழ் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாற்று தொழில்களுக்கான காணி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பாரபட்சம் காட்டப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து மலையக தமிழர் நாடு கடத்தப்பட்டிருக்காவிட்டால், இன்றைய இலங்கை பாராளுமன்றத்தில், குறைந்தபட்சம் 30 தமிழ் எம்பீக்கள் தென்னிலங்கையில் இருந்து மாத்திரம் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். ஆகவே இந்த ஒப்பந்தம் இலங்கை மலையக தமிழ் மக்களின் அரசியல் பலத்தை குறைத்து விட்டது.

இன்று பேசப்பட்டு வரும் தேர்தல் முறை சீர்திருத்தம், இந்நாட்டில் சிதறி வாழும் நமது மக்களின் பாராளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்களை இன்னமும் அபாயத்துக்குள் தள்ளும் நோக்கத்தை கொண்டுள்ளது. இலங்கையின் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் அதே அரசியல் பிரதிநிதித்துவ உரிமைகள், இலங்கை குடியுரிமை பெற்ற மலையக தமிழர் பரம்பரையினருக்கும் கிடைக்க வேண்டும்.

1964ம் ஆண்டின் சிறிமா சாஸ்திரி ஒப்பந்த கைச்சாத்திடலுக்கு பின்னர் 60 வருடங்களுக்கு பிறகும் நிலவுகின்ற இந்நிலைமைகள் குறித்து இலங்கை அரசிடம் பேசுங்கள். இதேபோல்தான் 1987ம் ஆண்டின் இலங்கை-இந்திய ஒப்பந்தமும் முழுமையாக அமுலாகவில்லை. இவை தொடர்பில் இந்திய அரசுக்கு கடப்பாடு இருக்கின்றது. இந்திய அரசு கொண்டுள்ள கடப்பாடுகளின் அடிப்படையில் இவ்விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் ராஜதந்திர அடிப்படையில் உரிய அழுத்தங்களை வழங்கும்படி இந்திய அரசை கோருகிறோம்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வாதன் ஷிருங்லாவிடம் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக இந்திய அரசுக்கான ஒரு மகஜர் ஆவணத்தையும் கையளித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :