வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் சேவை மன்றத்தினால் வழங்கி வைப்புஹஸ்பர் ஏ ஹலீம்-
ர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச ஆசிரியர் தினங்களை அனுஷ்டிக்கும் வகையில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் மூதுாா் கல்வி வலையத்திற்குட்பட்ட மூன்று வறிய மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கி வைக்கும் வைபவம் நேற்று(06) கிளிவெட்டி மகா வித்தியாலய கேட்போா்கூடத்தில் இடம்பெற்றது.

வன்னி ஹோப் நிறுவனத்தின் கல்வி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் டிஜிட்டல் கல்விமுறைய கிராமிய மட்டத்தில் மேம்படுத்தும் நோக்குடனே மேற்படி ஸ்மரர்ட் போன்கள் வழங்கி வைக்கப்பட்டன. மூதுாா் கல்வி வலையத்திற்குட்பட்ட கிளிவெட்டி மகா வித்தியாலயம், லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் அல்-தாஜ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களுக்கு இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிவெட்டி மகா வித்தியாலய அதிபர் கோணேஸ்வரராஜா தலைமையில் கோவிட் சுகாதார வழிகாட்டலுக்கு அமைய இடம்பெற்ற இந்த நிகழ்வில் மூதுாா் வலையக் கல்விப் பணிப்பாளர் திருமதி இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மூதுார் வலையக் கல்விப் பணிமனையின் நிர்வாகம் மற்றும் அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஜயந்தன், தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜே.எம். இக்பால், மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ் அதன் உத்தியோகத்தர்களான ஆர். கணேஷமூர்த்தி, எம். வசீம், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :