உலக ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை போராட விட்டதற்கு யார் பொறுப்பு



எஸ்.அஷ்ரப்கான்-
லக ஆசிரியர் தினமான இன்று (06 இலங்கையில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் உள்ள நிலையில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்த அமைதி வழிப் போராட்டம் இன்று (06) 10 மணிக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

தேசிய ரீதியாக இலங்கை முழுவதுமாக உள்ள வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த ஒரே நேரத்தில் நடத்தினர். அந்த அடிப்படையிலே கல்முனை வலயக் கல்வி அலுவலகம் முன்பாக இஸ்லாமிய ஆசிரியர் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த ஆசிரியர் ஆசிரியர் சங்க தொழிற்சங்க போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் அதிபர்கள் இணைந்து அமைதியான முறையிலே சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சுலோகங்களை ஏந்தி இடம்பெற்றது

இங்கு இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா உள்ளிட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு பல்வேறு சுலோகங்களை ஏந்தி தங்களது ஆதங்கங்களை வெளிக்காட்டி இருந்தனர்.

அந்த சுலோகங்களில், ஜனாதிபதி அவர்களே, எங்களது பிரச்சினைகளை செவிமடுங்கள், சுபோதினி அறிக்கையே எங்களது இலக்கு,ஆசிரியர்களை கௌரவிக்கும் தினத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களாக்கியது யார்?, புதிய பிரச்சினையை நாம் உருவாகாக வில்லை
பழைய முரண்பாட்டைத் தீருங்கள் என்கிறோம், மூன்று மாதங்களை அண்மித்தும் எங்கள் போராட்டங்களுக்கு மௌனம் சாய்ப்பது ஏன்?, ஆசிரியர்களை மலினப்படுத்தும் செயற்பாடுகள் குரு நிந்தனையே.
அதற்கான பிரதிபலனை உரியவர்கள் பெற்றே ஆக வேண்டும், ஏமாற்றும் எண்ணம் இல்லையாயின் ஏன் இந்த இழுத்தடிப்பு, வி.சி.பெரேரா,
சுபோதினி
நல்லாட்சி அமைச்சரவை அறிக்கை -
இன்னுமா எம்மை ஏமாற்ற வேண்டும்?, அரசே,
பிள்ளைகளின் கல்வி உரிமையை மேம்படுத்த நடவடிக்கை எடு, 5000/= கொடுப்பனவுக்கு அலைபவர்களா? ஆசிரியர்கள்,

ஆகிய சுலோகங்களை ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :