5 மாதங்களின்பின் கிழக்கில் முன்பள்ளிகள் ஆரம்பம்



வி.ரி.சகாதேவராஜா-
நீண்ட கொரோனா விடுமுறையையடுத்து,கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளிப்பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதாரநடைமுறை அவசியம் பின்பற்றப்பட்டுவருகின்றன.

கடந்த ஜந்துமாதகால கொரோனா விடுமுறையின் பின்னர் மீண்டும் கடந்த திங்களன்று முன்பள்ளிகள் கிழக்கில் திறக்கப்பட்டன.

கடந்த திங்களன்று (11) குறித்த பாடசாலைகளை ஆரம்பிக்குமாறு கிழக்கு முன்பள்ளிவாரியம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக சுகாதார முறைப்படி அவை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பமானநாள்முதலே கூடுதலான சிறுவர்சிறுமியர் பாடசாலைக்கு வருவதில் அதிகமுனைப்புகாட்டினர்.பெற்றோர்களும் அதிகஆர்வம்காட்டினர்.நீண்டகாலமாக வீட்டில் அடைபட்டுக்கிடந்த சிறுவர்கள் குதூகலமாக பாடசாலைக்கு வருவதைக்காணமுடிந்தது.

சிறுவர்கள் கைகழுவுதலுடன் மாஸ்க் அணிந்து, சமுகஇடைவெளியுடன் பழகுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்பள்ளிகள் தோறும் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் சென்று மாணவர்களுக்கான அறிவுரைகளை தெளிவுபடுத்திவருகின்றனர்.

காரைதீவு விபுலாநந்தா மொன்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் ,நேற்று முன்தினம் (14) பிரதேச பொதுச்சுகாதாரபரிசோதகர் பாடசாலையில் கொரோனாத்தவிர்ப்பு செயற்பாட்டிற்காக சிறுவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் எனும் அறிவுறுத்தல் செய்தியை வழங்கினார்.
கூடவே டெங்கு நோயின்தாக்கம் .அதனை எவ்வாறு தவிர்த்துக்கொள்ளலாம்? என்பதையும் இலகுவான மொழிநடையில் அவர் விளக்கமாகக்கூறினார்.
பாடசாலையில் மேற்கொள்ளவேண்டிய சுகாதாரநடைமுறை விதிகளையும் அங்கு தெளிவாக அவர் எடுத்துக்கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :