கல்முனைக்கு 2வது டோஸூக்காக 1லட்சம் சினோபாம் கிடைத்தன.
நேற்றுடன் அவை தீர்ந்தன:அடுத்தவாரம் இரண்டாம் கட்டம் ஆரம்பம்!
வி.ரி.சகாதேவராஜா-
எமது கல்முனை பிராந்தியத்தில் இரண்டாவது டோஸ்ஸூக்கென இறுதியாக 1லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைத்தன.அவற்றை எமது 13 சுகாதாரப்பரிவுகளிலும் வழங்க 5தினங்கள் ஒதுக்கினோம். ஆனால் எண்ணி 3 தினங்களில் அதாவது நேற்றுடன்(01) நிறைவடைந்தது. 50வீதமானோருக்கு இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டிருக்கிறது.அடுத்தவாரம் இரண்டாம்கட்டம் ஆரம்பமாகும்.தடுப்பூசியே மரணத்தை வெல்லும் ஆயுதம்.
என்று கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைபணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
கல்முனைப்பிராந்தியத்தில் சமகால கொவிட் நிலைமை பற்றிமேலும் கூறுகையில்:
எமக்கு முதலில் கிடைத்த தடுப்பூசிகளைக்கொண்டு முதலாவது டோஸ் இதுவரை 95வீதமானோர்களுக்கு ஏற்றியுள்ளோம்.
இதுசாதனையாகக்கருதப்பட்டது. எனினும் 60வயதுக்கு மேற்பட்ட சிலர் இன்னும் தடுப்பூசிகளைப் பெறாதகாரணத்தினால் மரணவீதம் அதிகரித்துவந்தது.
முதலாவது டோஸ் நிறைவுசெய்ய 50ஆயிரம் ஊசிகளும் இரண்டாவது டோஸ் வழங்க 2லட்சத்து 40ஆயிரம் ஊசிகள் தேவைப்பட்டன. கடந்தவாரம் கிடைத்த 20ஆயிரம் தடுப்பூசிகளைக்கொண்டு கணிசமான கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் 60வயது கடந்தோருக்கும் ஏற்றியுள்ளோம்.
இறுதியாக 1லட்சம் சினோபாம் தடுப்பூசிகள் கிடைத்தன. அவற்றைக்கொண்டு
இரண்டாவது டோஸ் கடந்த திங்கட்கிழமை(30) 5நாட்களுக்கென ஆரம்பித்தபோதிலும் 3நாட்களில் அவை தீர்ந்துவிட்டது.
தடுப்பூசி தொடர்பில் தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு ஆர்வம் என்பன இதனை 3நாட்களுள் ஏற்றக்கூடியதாயிருந்தது. எவ்வித தொந்தரவும் இல்லாதிருந்தது.மேலும் வயதானவர்களுக்கு இளைஞர்கள் வழிவிட்டு முன்னுரிமையளித்தமையையும் காணக்கூடியதாயிருந்தது.
எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டுக்கு ஒருதொகுதி சினோபாம் ஊசிகள் வருகின்றன. ஆதலால் அடுத்தவாரமளவில் எஞ்சிய 50வீதமானோருக்கு வழங்கமுடியும்.
இதேவேளை கல்முனை பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 32 தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. இதுவரை 145 மரணங்கள் நிகழ்துள்ளன.
எதுஎப்படியிருப்பினும், இம்மாதம் நிறைவுறும் நேரம் எமது பிராந்தியத்தில் கொவிட் மரணத்தை பூச்சியமாக்கவுள்ளோம்.
எனவேபொதுமக்கள் நிலைமையினை புரிந்துகொண்டு மிகவும் கவனமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் . அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தின் அவசியத்தை உணர்ந்து நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் .
0 comments :
Post a Comment