மாத்தளை மாநகரசபையின் ஏற்பாட்டில் மாநகர சபையின் சுகாதாரப்பிரிவினரால் மாநகரிலுள்ள வீடுகளில் வரமுடியாதவர்களுக்கு நேற்று தடுப்பூசி ஏற்றப்பட்டது.
மாத்தளை மாநகரசபை முதல்வர் மேயர் சந்தனம் பிரகாஷ் தலைமையில் மாநகரசபை வைத்திய அதிகாரி டாக்டர். அனுஷ வெலகெதர தலைமையிலான குழுவினர் இச்சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அத்தருணம் மாத்தளை மாநகரசபை முதல்வர் மேயர் சந்தனம் பிரகாஷ் உறுப்பினர் த.மோகன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோரும் தொடர்ந்து அத்தனைவீடுகளுக்கும் சென்று இச்செயற்றிட்டத்தை ஊக்குவித்தனர்.
60 வயதுக்கு மேற்ப்பட்டவா்களுக்கும் எழுந்து செயல் பட முடியாத நபா்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.

0 comments :
Post a Comment