ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் இத்தருவாயில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ச.தோ.ச விற்பனை நிலையங்கள் மூலம் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
இப்பொருட்கள் எல்லா மாவட்டத்திற்கும் வழங்கப்படுவதைப் போன்று அம்பாறை மாவட்டத்திற்கும் வழங்கப்படுவதாக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள ச.தோ.ச விற்பனை நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படாமல் மொத்த வியாபாரிகளுக்கும், தெரிந்தவர்களுக்கும் வழங்கப்படுவதாக பொதுமக்கள் றிஸ்லி முஸ்தபாவிடம் தெரிவிக்கின்றனர்.
இதன்மூலம் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது ஆதாரபூர்வமாக தெரியவந்தால் உயர் அதிகாரிகள் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
மேலும் இவ் ஊடக அறிக்கையில் தெரிவிப்பதாவது; கூடுதலான டின் மீன்கள், மைசூர் பருப்பு, பெரியவெங்காயம், கோதுமைமா, பால்மா, அரிசி, சீனி போன்ற பொருட்கள் ச.தோ.ச நிலையத்துக்கு ஒவ்வொரு நாளும் வந்திறங்கும்வேளை இவ்வாறான செயற்பாடுகளை செய்து மக்களுக்கு நேரடியாக இந்த பொருட்களை நியாயமான விலையில் வழங்காமல் இப்படி பதுக்கி வைப்பது, இப்படி மொத்த வியாபாரிகளுக்கு, தெரிந்தவர்களுக்கு கொடுப்பது என்பது மக்களுக்கு நேரடியாக செய்யும் மிகப்பெரும் அநீதி என்பதை றிஸ்லி முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறித்த பிரதேசங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தேவையான பொருட்கள் தாராளமாக அரசிடம் இருப்பதால் ஏதாவது பொருட்கள் குறைபாடுகள் இருப்பின் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் இதுகுறித்து அரசு தரப்பு அமைச்சர்கள் மூலம் நிவர்த்தி செய்து புதிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் ச.தோ.ச பொறுப்பாளர்களிடம் கூறுவதாகவும் இவ் ஊடக அறிக்கையில் றிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment