கொழும்பில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி ஏற்றும் பணி இன்று ஆரம்பம்.



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ற்போது நாட்டில் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா நோயைக் கட்டுப்படுத்தி அதிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடராக முன்னெடுத்து வருகின்றது.

கொழும்பு 13 பொது சுகாதார திணைக்களத்தின் ஜிந்துப்பிட்டி அரச வைத்தியசாலையின் புனித போல்ஸ் சிறுவர் நலன்புரி நிலையத்தில் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சினோபாம் தடுப்பூசி போடும் பணி இடம் பெற்றன.
வைத்தியர்களான அசினி. பத்தும் கொடிகார மற்றும் ஜிந்துப்பிட்டி அரச வைத்தியசாலையின் பொது சுகாதார பரிசோதகர் ஹேரத் ஆகியோரின் கண்காணிப்பில் வைத்திய தாதிகள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை கொழும்பு 12 அல்-ஹிக்மா கல்லூரியில் வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுல் நஜ்மி ஜீம்ஆப் பள்ளிவாசலின் அனுசரைணயுடன் சினோபாம் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள் இடம் பெற்றன. இந்தப் பணிகளும் வைத்தியர்களான அசினி. பத்தும் கொடிகார மற்றும் ஜிந்துப்பிட்டி அரச வைத்தியசாலையின் பொது சுகாதார பரிசோதகர் ஹேரத் ஆகியோரின் கண்காணிப்பில் வைத்திய தாதிகள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது பள்ளிவாசல் தலைவர் இஸ்மத் ஹாஜி உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :