பொகவந்தலாவை சிங்காரவத்தை தோட்ட சிறுவர் பராமறிப்பு நிலையத்திதை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருமான பா.சிவனேசன் தெரிவித்தார்.
களனிவெளி பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட பொகவந்தலாவை சிங்காரவத்தை தோட்டத்திலுள்ள சிறுவர் பராமறிப்பு நிலையம் கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டுள்ளமையினால் தொழிலுக்கு செல்லும் தாய்மார்கள் பல்வேறு அசௌகரயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
இது தொடர்பில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட தலைவர் மற்றும் வட்டார இளைஞரணி அமைப்பாளர் சதிஸ்மேனன் ஆகியோர் எனது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து தோட்ட நிவாகத்துடன் தொடர்பு கொண்டு பேசிய போது கெரோனா தொற்று அச்சம் காரணமாக களனி வெளி கம்பனிக்குட்பட்ட தோட்டங்களிலுள்ள அனைத்து சிறுவர் பராமறிப்பு நிலையங்களை மூடுமாறு கம்பனியிலிருந்து எங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனவே தான் , சிங்காரவத்தை தோட்டத்திலுள்ள சிறுவர் பராமறிப்பு நிலையத்தையும் மூடினோம்.
எனினும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த சிறுவர் நிலையத்தை மீண்டும் திறந்து இயங்க செய்ய நடவடிக்கை எடுப்பதாக தோட்ட நிர்வாகம் தன்னிடம் உறுதியளித்துள்ளதாக சிவனேசன் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment