கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவிப்பு..!



எம். என். எம். அப்ராஸ்-
ல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் முதலாவது தடுப்பூசி பெற்ற 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும்
நடவடிக்கைகள் கடந்த திங்கள் தொடக்கம் வியாழன் வரை 04 நாட்களுக்கு கிராம அலுவலர் ரீதியாக பிரிக்கப்பட்டு
பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஒழுங்கமைக்கப்பட்டுஏற்பாடாகி தடுப்பூசி செலுத்தும் பணி இன்று வரை (01) புதன் கிழமை இடம்பெற்று வந்த நிலையில்,கிடைக்கப் பெற்ற தடுப்பூசிகள் முடிவடைந்த நிலையில் தெற்கு பிரிவில் நாளைய தினம் வியாழக்கிழமை(02/9/2021) கல்முனை, மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்இடம்பெறாது என கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் .அஸ்மி தெரிவித்தார்.

மீண்டும் தடுப்பூசி கிடைக்கப் பெற்றதும் எமது தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசி செலுத்தும்பணி முன்னெடுக்கப்படும் இதற்கான திகதி ,தடுப்பூசி செலுத்தும் இடங்கள் ,நேரம் பற்றி அறிவிப்புக்கள் மேற்கொள்ளப்படும் குறித்த அறிவிப்பின் பிற்பாடு தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்குக்கு மேற்ப் பட்டவர்கள் பெற்றுக் கொள்ள முடியுமென
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி மேலும் தெரிவித்தார்.

இதேவேளைபொதுமக்கள் சிரமமின்றி இலகுவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளும் முகமாக தெற்கு சுகாதார பிரிவில் கிராமசேவகர் ரீதியாக பிரிக்கப்பட்டு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த தினங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிகவும்சிறப்பான ஒழுங்கமைக்கப்பட்டிருந்தமையினை காணக்கூடியதாக இருந்தது இந்நிலையில் குறித்த செயற்பாட்டினை பொது மக்கள் வெகுவாக
பாராட்டியதுடன்இச் செயற்பாட்டினை முன்னெடுத்து நெறிப்படுத்தும் வரும் கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் மற்றும் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மிஉட்பட தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்,பொதுசுகாதார பரிசோதகர்கள்,
குடும்ப நல உத்தியோகத்தர்கள், செயலணி பயிற்சியாளர்கள் , கல்முனை கொரோனா தடுப்பு செயலணியினர்ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்தனர்.
கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் கடந்த மூன்று நாட்களில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற்றுக் கொள்ளமிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு வருகை தந்து தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டதை அவதானிக்க முடிந்தது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :