காட்டு யானைகளின் தாக்குதலினால் மின்சாரக் கம்பங்கள் சரிந்து வீழ்ந்துள்ள சம்பவமொன்று கிண்ணியா சோலை வெட்டுவான் கிராமத்தில் அண்மையில் இடம் பெற்றுள்ளன.
இதனை சீர் செய்யும் பணியில் இன்று (02) இலங்கை சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது:- சம்பவ தினத்தன்று யானைகள் குறித்த கிராமத்தில் பிரவேசித்து மூன்று மின்சாரக் கம்பங்களை தாக்கி கீழே வீழ்த்தியுள்ளன.
இப்பகுதியில் யானைகள் வருவதை தடை செய்ய மின்சார வேலிக் கம்பம் போடப் பட்டிருந்தும், மின்சார கம்பங்களை உடைத்து வருவதாகவும், அதேவேளை இதற்கு முன்னரும் இவ்வாறான வேலிகளை உடைத்து கிராமத்திற்குள் உள்ளே நுழைந்து சேதப்படுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment