இந்தியாவிலுள்ள புக் ஒப் றெக்கோட்ஸ்(Indian Book of Records) பப்லிகேஷன் நிறவனத்தினால் நடாத்தப்பட்ட நினைவாற்றல் போட்டியில் மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த ஆறு வயதுடைய சிறுமி ஆசிய நாடுகளுக்கிடையே சாதனை நிலைநாட்டியுள்ளார்.
ஜெஸா ஜெய்னப் என்ற இச்சிறுமி நாற்பது நாடுகளின் பெயர்கள் மற்றும் ஆங்கில மொழியில் நூறு சொற்களையும் ஒரு நிமிடம் ஐம்பது வினாடிகளில் பிழையின்றி மிக வேகமாக எழுத்துக்கூட்டல் செய்கிறார்.
கடந்த சில சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்செய்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் இச்சிறுமிக்கு நினைவுச்சின்னம் மற்றும் தங்க மோதிரம் என்பவற்றை வழங்கி கௌரவித்து பாராட்டுத்தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் மிச்நகர் பகுதியில் வசிக்கும் முகமட் பஸால் பாத்திமா சனுசா தம்பதிகளின் முதலாம் பிள்ளையான இவர் ஏறாவூர் அல்- அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் முதலாந்தர மாணவியாவார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான அரிசியல் வாதிகள் தனது வீட்டிற்கு வருகைதந்து தன்னைப்பாராட்டி ஆசீர்வதிக்கவேண்டுமென்பது தனது ஆசையென இவர் கூறுகிறார்.
மேலும் திறமையுடன் கல்வி கற்று எதிர்காலத்தில் விமான ஓட்டி Pilot ஆக வருவதே தனது இலட்சியமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அவரது இலட்சியம் நிறைவேற எமது நிறுவனம் பிரார்த்திக்கிறது.
0 comments :
Post a Comment