நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த ஒருவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவம் 06.09.2021.திங்கள்கிழமை மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேக நபர் வீட்டில் இருந்து இருபது லீற்றர் கோடா கைப்பற்றபட்டதுடன் கசிப்பு
தயாரிப்பிற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு குறித்த சந்தேக நபர் எல்பட கீழ் பிரிவு தோட்ட பகுதியை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாடளாவிய ரீதியில் பயணதடை ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற சட்டவிரோதமான கசிப்பு தோட்டப்பகுதிகளில் தயாரிக்கப்பட்டு அதிக
விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment