ஊரடங்குவேளையில் ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்! காரைதீவில் நடுநிசியில் சம்பவம்:2 மணி நேரம் திகில்: மதில்கள் கேட்டுகள் சேதம்!



வி.ரி.சகாதேவராஜா-
ரடங்குவேளையில் நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த யானைகள் பலத்த அட்டகாசம் செய்து பலத்த சேதங்களை ஏற்படுத்திச்சென்றன.

இச்சம்பவம் காரைதீவில் நேற்று(6) நடுநிசியில் இடம்பெற்றது. இதனால் நேற்று அதிகாலை வரை அங்கு பதட்டமும் பீதியும் நிலவியது.

முற்பகல் 2.10மணியளவில் ஊருக்குள் புகுந்த யானைகள் வீதியால் சென்றபோதும் அருகிலுள்ள கதவுகள் மதில்கள் அனைத்தையும் பதம்பார்த்துச்சென்றன.சிலரது வளவுக்குள்ளும் சென்றன.
மிகவும் உயரமான பாரிய யானையொன்றும் அதில் காணப்பட்டதால் மக்கள் மிகுந்த பீதியுடன் சுமார் இருமணிநேரம் இரவைக்கழிக்கவேண்டியதாயிற்று.

இளைஞர்கள் சிலர் சேர்ந்து யானையை விரட்டியபோதும் மறுபக்கதால் மற்றுமொரு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. காரைதீவில் சனஅடர்த்திமிக்க முதலாம் இரண்டாம் பிரிவுகளில் யானைகளின் அட்டகாசம் இடம்பெற்றன.
பலரது மதில்கள் பிரதான வாசல் கேட்டுகள் பயிர்பச்சைகள் அனைத்தும் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகின.எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

வீதிமின்விளக்குகளின் வெளிச்சம் பகல்போல்இருந்ததால் பலரது வீடுகளிலிருந்த சிசிரிவி கமராக்களுள் யானைகளின் அட்டகாசமும் இளைஞர்கள் துரத்திச்செல்வதும் பதிவாகியிருந்தது. சிலஇளைஞர்கள் தமது கையடக்கததொலைபேசியில் படங்களை சிறைப்பிடிக்கவும் தவறவில்லை.

சுமார் இருமணிநேரம் மக்கள் பீதியுடன் உயிரைக்கையில்பிடித்துக்கொண்டு இரவைக்கழிக்கவேண்டியதாயிற்று. யானைகள் இறுதியில்அதிகாலை 4மணியளவில் வயல்பகுதிக்குச்சென்றதும் மக்கள் நிம்மதியடைந்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :