காரைதீவு 1967 நண்பர்கள் குழுமியத்தால் 1700ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் கல்முனை காரைதீவு மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
பிரான்ஸில் வாழும் நண்பர்கள் குழுமிய உறுப்பினர்; ச.தேவகடாட்சத்தின் உறவுகள் வழங்கிய நிதியுதவியைக்கொண்டு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
1700ருபா பெறுமதியான 125 பொதிகள் தயாரிக்கப்பட்டு 125குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. இவை கல்முனை பாண்டிருப்பு நீலாவணை மற்றும் காரைதீவுப்பிரதேசங்களில் வழங்கப்பட்டன.
காரைதீவு 1967 நண்பர்கள் குழுமியத்தலைவரும் மட்டு.பிரதி மாகாண நீர்ப்பாசன பணிமனை விசேடதர படவரைஞர் (DOA) செ.மணிச்சந்திரன் தலைமையில் இவ்விநியோகம் நடைபெற்றது.
அவ்வமயம் பிரான்ஸிலிருந்து வந்த ச.தேசகடாட்சமும் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நண்பர்கள் குழுமியம் காரைதீவில் 1967இல் பிறந்தவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அமைத்த ஒரு குழுவென்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment