இலங்கை தேசிய கபடி அணியின் முதற் கட்ட தெரிவில் நிந்தவூரை சேர்ந்த மூவர் தெரிவு




எம். என். எம். அப்ராஸ்-
லங்கையின் தேசிய கபடி அணியின் முதற்கட்ட தெரிவில் அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் இருந்து மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழகத்தின் வீரர் களான அஸ்லம் சஜா , எச். எம். எம். ஹாலிஸ், எ. எ. அப்லால் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

சீனாவில் எதிர்வரும் (2022) ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள 19 வது ஆசிய மட்ட விளையாட்டு போட்டியில்
கபடி போட்டிக்காக வீரர்களை தயார்படுத்தும் முகமாக இலங்கை கபடி சம்மேளத்தினால் கொழும்பில் உள்ளவிளையாட்டு அமைச்சின் உள்ளக அரங்கில் கடந்த(14) சனிக்கிழமை இடம்பெற்ற அணி வீரர்கள் முதற்கட்டதெரிவில் இவர்கள் மூவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் திறமையினை இனங் கண்டு தெரிவு செய்த தேசிய கபடி சம்மேளனத்தினருக்கும் இவர்களுக்கு பயிற்ருவித்த பயிற்றுவிப்பாளர் கீத் அவர்களுக்கும் மற்றும் மதீனா விளையாட்டு கழகத்தின் தலைவர் எ. எம் அன்சார் உட்பட கழக சிரேஸ்ட வீரர்களுக்கும் இவர்களுக்கு ஆரம்பம் முதல் இதுவரையும் பயிற்சி மற்றும் ஆலோசனையினை வழங்கி வரும் ஆசிரியர் எஸ். எம் .இஸ்மத் ஆகியோருக்கு அம்பாறை மாவட்ட கபடி சம்மேளனத்தின் தலைவர் எ. எல். அனஸ் அஹ்மட் உட்பட உறுப்பினர்கள் நன்றியினை தெரிவித்தனர்.
இவர்களின் தெரிவு மூலம்அம்பாறை மாவட்டத்திற்கும் நிந்தவூர் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
குறித்த வீரர்களுக்கு அஸ்லம் சஜா, எச். எம். எம். ஹாலிஸ் ஆகியோர் இலங்கை கபடி அணியின் மூலம்சர்வதேச ரீதயாக இடம்பெற்ற கபடி
போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :