சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் புதிய நிர்வாக தெரிவுஎம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் இந்த ஆண்டுக்கான (2021) மறுசீரமைக்கப்பட்ட புதிய நிர்வாகத் தெரிவு மன்றத்தின் பிரதான அலுவலகத்தில் (02) சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெற்றது.

இந்த நிர்வாகத் தெரிவில் அமைப்பின் தலைவராக கலைஞர் அஸ்வான் சக்காப் மௌலானா, பொதுச்செயலாளராக நவமணிப் பத்திரிகையின் முன்னாள் ஊடகவியலாளரும் மெட்ரோ லீடர் பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான எம்.எஸ்.எம்.ஸாகிர், பொருளாளராக எம்.ஐ. றியாஸ் மற்றும் பிரதித் தலைவர்களாக ஏ.எச்.நாஸிக் அஹமத், எம்.எச்.எம். அலி ரஜாய், தவிசாளராக எஸ்.எம். ஸாதிக், உதவிச் செயலாளராக எஸ்.எல். ரஷீட், கணக்காய்வாளராக எம்.ஆதம்பாவா(ஜிப்ரி), தேசிய இணைப்பாளராக ஏ.எல்.எம் அறபாத், மகளிர் செயலாளராக நிரோபா ஜானூன், இளைஞர் செயலாளராக ஏ.ஜே. அன்வர் ஆகியோரும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அமைப்பின் ஆலோசகர்களாக சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளரும் பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.எல்.எம்.சலீம், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ. ஜப்பார், ஏ.பீர் முஹம்மத், மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி என்.ஏ.அஸாம், ஐக்கிய காங்கிரஸ் தலைவர் முபாரக் அப்துல் மஜீத், அதிபர் யூ.எல்.நஸார் ஆகியோரும் நியமிக்கப்பட்டதோடு, செயற்குழு உறுப்பினர்களாக ஏ.எல்.நூர்தீன், ஆசிரியரும் அறிவிப்பாளருமான ஏ.எல். நயீம், ஏ.எச்.எம். நௌஷாத், இப்றாஹிம் ஜாபீர், எம்.எச்.எம். அஸ்வர், யூ.கே.எம். அஸாம், எஸ் சபீனா, சுஹைல் அஸீஸ், எம்.எம்.இல்யாஸ், கே.எம்.ஏ அஸீஸ், பிரபல அறிவிப்பாளர் ரோஷன் அஷ்ரப், பிறை எப்.எம்.அறிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல், உவைஸ் முஹம்மட், எம்.ஐ.எம்.அக்றம் (பஸீல்), ஆகியோரும் மற்றும் ஊடக இணைப்பாளர்களாக ஊடகவியலாளர்களான நூருல் ஹுதா உமர், எம்.என்.எம் அப்றாஸ் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய நிர்வாகத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :