முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டியின் இன்றைய நிலை!லங்கையை உலுக்கிக்கொண்டிருக்கின்ற கொரோனா தீநுண்மியின் மூன்றாவது அலை கிழக்கு மாகாணத்தையும் விட்டுவைக்கவில்லை. அங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தை நேற்று(6) தாண்டியிருகின்றது. அந்தளவிற்கு தொற்றுக்களின் எண்ணிக்கை தினம்தினம் அதிகரித்துவருகிறது. 166மரணங்களும் சம்பவித்திருக்கின்றன.

இந்தநிலையில் பல கிராமங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. பலகுடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றன. மிகுந்த நெருக்கடி நிலை தோன்றியிருக்கிறது.
அந்தவகையில் அம்பாறை மாவட்ட கல்முனைப்பிராந்தியத்தில் ஒரேயொரு கிராமம் முடக்கப்பட்டிருக்கிறது. அது புதிய வளத்தாப்பிட்டி என்பதாகும். அக்கிராமத்தின் இன்றைய நிலை பற்றி இக்கட்டுரை விபரிக்கிறது.

அம்பாறை நகரிலிருந்து கிழக்காக 9கி.மீற்றர் தொலைவில் அம்பாறை காரைதீவு பிரதானவீதியில் அமைந்துள்ளது. சம்மாந்துறை பிரதேச செயலகப்பரிவில் 52கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. அவற்றுள் வளத்தாப்பிட்டி கிராமசேவையாளர் பிரிவு என்பது 1200குடும்பங்களைக் கொண்டது.
இக்கிராமசேவையாளர் பிரிவில் புதிய வளத்தாப்பிட்டி பழைய வளத்தாப்பிட்டி பளவெளி இஸ்மாயில்புரம் எனும் நான்கு கிராமங்கள் வருகின்றன.

இந்நான்கு பிரிவுகளில் ஒன்றான புதியவளத்தாப்பிட்டிக்கிராமத்தில் 450குடும்பங்கள் வருகின்றன அங்கதான இந்த கொரோனாத் தாக்கம் தீவிரமாகி இன்று 63தொற்றாளர்களின் இனங்காணலுடன் முடக்கப்பட்டிருக்கின்றது.அங்கு ஒரு மரணமும் சம்பவித்திருக்கின்றது.

இன்றைய புதிய வளத்தாப்பிட்டி நிலைவரத்தை அங்குள்ள சமுகசேவையாளரும் தொண்டருமான வெள்ளி ஜெயச்நதிரனை கேட்டபோது அவர் கிராமத்திற்குள்ளிருந்து தொலைபேசியில் கூறிய தகவல்களை இங்குதருகின்றோம்.


புதிய வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளரும் சம்மாந்துறைபிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளருமான வெள்ளி ஜெயச்சந்திரன் கூறுகையில்:
கடந்த 24 ஆம் திகதி தொடக்கம் பயணத்தடை மற்றும் முடக்கம் என்பவற்றால் எமது மக்கள் பசி பட்டினியால் வாடும் நிலையை எதிர்நோக்கியுள்ளார்கள். எனவே பொருட்களை தாராளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் .

சடுதியாக எமது கிராமத்துள் 63பேருக்கு தொற்று ஏற்பட்டு ஒருவர் மரணித்த காரணத்தினால் கடந்த 3நாட்களாக முடக்கப்பட்டுள்ளது. வீதிக்குவீதி இராணுவமும் பொலிசாரும் பரப்பப்பட்டுள்ளனர். மகக்ள் வெளியே உள்ளே செல்லாதவாறு தடையிடப்பட்டுள்ளது.

இன்னும் 10நாட்களுக்கு இந்த முடக்கம் நீடிக்கப்படலாம். எனவே ஏலவே முடங்கியிருந்த மக்களுக்கு இந்த முடக்கம் மேலும் சுமையைக் கொடுத்திருக்கின்றது.
அரசாங்கத்தின் நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை. அதுகிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளது. பிரதேசசெயலாளர் பல நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதை அறிவோம்.
இங்குள்ள அரச தொழிலாளர்கள் அடிமட்டத்திலுள்ளவர்கள். எனவே அவர்களை ஏனைய அரசதொழிலாளர் போல் கொழுத்த சம்பளம் பெறுபவர்கள் என நினைத்து நிவாரணத்தi நிறுத்திவிடவேண்டாமென தயாவாகக்கேட்கிறோம். அவர்கள் கடன்பட்டு மாதம் 10ஆயிரம் ருபாவைக்கூட பெறாதவர்களாகவுள்ளனர்.

சுகாதாரநெறிமுறைப்படி இரு கடைகளையாவது திறந்து பொருட்களை தாராளமாக வழங்க குறிப்பாக அரசின் நிவாரணத்தில் உள்ளடக்கப்படாத பெண்களின் துவாய்கள் தேங்காண்எண்ணெய் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க்கபடவேண்டும்.
மேலும் தனவந்தர்கள் உதவிசெய்பவர்களுக்கு அனுமதி அளித்து எமது மக்களின் பசிபட்டினையை போக்க உரிய அரச அதிகாரிகள் உதவவேண்டும் எனக்கேட்கிறோம்.

இதுதொடர்பாக அப்பிரதேச உயரதிகாரி என்றவகையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனிபாவைத் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் கூறியவற்றையும் இங்கு தருகின்றோம்.
கொரோனாத் தொற்று அதிகரித்த காரணத்தினால் கடந்த 4ஆம் திகதி முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கு இன்று(7) திங்கட்கிழமை 5000ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகள் வழங்கப்படவிருக்கின்றன .

முடக்கப்பட்ட புதிய வளத்தாப்பிட்டிக்கிராமத்தை 24மணிநேரமும் கண்காணிப்பதற்கென பழையவளத்தாப்பிட்டியில் கிராமசேவையாளர் ரவி தலைமையில் பிரதேசசெயலக ஊழியர்கள் ஜவர் நியமிக்கப்பட்டு மக்களது தேவைகளை வழங்கி கண்காணித்துவருகின்றனர்.
தவிர புதிய வளத்தாப்பிட்டிக்கிராமத்துள் கொவிட் கிராமமட்டக்குழுவும் இயங்கிவருகின்றது.

பிரதேச செயலாளர் ஹனிபா மேலும் கூறுகையில்:
மக்களுக்குத் தேவையான அடிப்படையான உணவுப்பொருட்களை வழங்குவதற்கு கடந்த 3நாட்களாக அங்கு மரக்கறி மீன் விற்பனையாளர்கள் சிலருக்கு அனுமதி வழங்கியிருந்தோம். அவர்கள் பணத்திற்கு அவற்றைப்பெற்றுக்கொள்வதற்கு அது வசதியாகவிருந்தது.

எனினும் அங்குள்ள மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் வசதிகுறைந்த நிலையிலிருப்பதால் 7நாட்களுள் வழங்கப்படவேண்டிய அரசின் 5ஆயிரம் ருபா பெறுமதியான உலருணவுப்பொதிகளை இன்று(7)திங்கட்கிழமை வழங்கத்திட்டமிட்டுள்ளோம்.

இக்கராமம் முடக்கப்பட்nருப்பதால் கொரோனவுக்குரிய அரசின் 5000ருபா கிடைக்கவாய்ப்பில்லை.ஆனால் சமுர்த்திக்கொடுப்பணவு வழங்கப்படும் அத்துடன் முடக்கத்திற்குரிய வருமானம்குறைந்தவர்களுக்கான 10000ருபா பெறுமதியான இரு உலருணவுப்பொதிகள் 7நாட்கள் வித்தியாசத்தில் வழங்கப்படும்.இதைவிட முடக்கப்பட்ட பிரதேசத்தினுள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு வருமான வரையறை பார்க்காமல் அனைவருக்கும் அதற்கான 5000ருபா வீதம் இருகொடுப்பனவு உலருணவாக வழங்கப்படும்.

அங்குள்ள அரசஊழியர்கள் என்றாலும் அவர்கள் ஆரம்பகட்ட ஊழியர்கள் என்பதால் சம்பளம்குறைவு. இடம்பெயர்ந்து மீள்குடியேறியிருப்பதால் கடன்பெற்று தெவைகளை செய்வதனால் சம்பளம் மேலும் குறைவு. அதுமாத்திரமல்ல நாட்கூலியுடன் கடமையாற்றும் அரசஊழியர்களுமுள்ளனர்.
இவர்களையிட்டு அரசஅதிபரோடு பேசி ஏதாவது பெற்றுக்கொடுக்கலாமா என்பதையிட்டு கலந்துரையாடிவருகின்றோம். நிவாரணம் வழங்குபவர்கள் கிராமசேயாளரோடு தொடர்புகொண்டு வழங்கமுடியும். என்றார்.

வி.ரி.சகாதேவராஜா - காரைதீவு நிருபர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :