நாளை மாத்திரம் பாராளுமன்ற அமர்வுற்போதைய கொரோனா வைரசு தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு இந்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வுகளை நாளைய தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக நாளை காலை 10 மணி முதல் மாலை நான்கு முப்பது வரை பாராளுமன்ற அமர்வு வரையறுக்கப்பட்டிருக்கும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் காலை நிதி தொடர்பான சட்டங்கள் குறித்தும் மாலை நாட்டின் கொரோனா வைரசு தொற்று நிலைமை மற்றும் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் குறித்த விவாதங்களும் நடைபெறவுள்ளன.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் இந்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வு தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :