வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ஒருவர் சுட்டுக் கொலை



ட்டக்களப்பில் உள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று மாலை மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டுற்கு முன்பாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது மெய்பாதுகாவலரால் துப்பாக்கிய பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் மெய்பாதுகாவலரின் துப்பாக்கியையும் பறிக்க முயன்ற நிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஜி.என்.விஜயசேன உட்பட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரைணைகளை முன்னெடுத்துவருகின்றது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :