கிழக்கில் 10ஆயிரத்தை தாண்டிய கொரோனாத் தொற்றாளர்கள்! 179பேர் மரணம்: நாளை தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்!வி.ரி.சகாதேவராஜா-
கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியிருக்கின்றது.அங்கு இதுவரை(6) 10167பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொவிட் தொற்றின் மூன்றாம் அலையின்போது 6302பேர் இம்மாகாணத்தில் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் இந்நோய்த் தொற்று காரணமாக 3579 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3055 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 1669 பேரும் கல்முனை பிராந்தியத்தில் 1864 பேரும் இந்நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொவிட் தொற்றின் போது கிழக்கு மாகாணத்தில் இதுவரை(6) 179மரணங்கள் பதிவாகியுள்ளது. மூன்றாம் அலையின் அதிகூடுதலான மரணங்கள் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.

இம்மாவட்டத்தில் 104 மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 39 பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 19 மரணங்களும் கல்முனை பிராந்தியத்தில் 17 மரணங்களும் பதிவாகியுள்ளதால் கிழக்கு மாகாண மக்கள் மிகுந்த அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கிழக்கில் சைனோபார்ம் தடுப்பூசி வழங்கும் திட்டம் (8) செவ்வாய்க்கிழமை முதல் செயற்றபடுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக கல்முனைப்பிராந்தியம் தவிர்ந்த திருமலை மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களுக்கு 75ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்படவிருக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :