மருதமுனை பிரதேச கடற்கரைப் பகுதிக்கு பொதுமக்கள் வருவது தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. மருதமுனை கொரோனா தடுப்புச் செயலணி தீர்மானம்.பி.எம்.எம்.ஏ.காதர்-
ன்று 2021-05-10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரும் வரை மருதமுனை பிரதேச கடற்கரைப் பகுதிக்கு உள்ளுர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் வருவது தடைசெய்யப்பட்டுள்ளதாக மருதமுனை கொரோனா தடுப்புச் செயலணி அறிவித்துள்ளது.நாட்டில் தீவிரமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் சனிக்கிழமை மாலை(08-05-2021)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே ஏகமனதாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி,கல்முனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகரும்,சமூகப் பொலிஸ் பொறுப்பதிகாரியும்,கொரோனா கட்டுப்பாட்டுப் பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட்,மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹ_சைனுதீன் றியாழி,மருதமுனை தாறுல்ஹ_தா மகளிர் அறபுக் கல்லுரியின் பணிப்பாளர்; கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாறக் மதனி,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி அதிபர் எம்.ஜே.அப்துல் ஹசீப்,ஷம்ஸ் மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல்.சக்காப்,பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்,வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இங்கு ஏகமனதாக மேலும் பின்வரும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன:- தொழில் நிமித்தம் வெளி இடங்களுக்குச் சென்று ஊர் திரும்புகின்வர்கள் தங்களின் வருகையை தங்கள் பிரிவு கிராம உத்தியோகத்தர் அல்லது பொதுச் சுகாதாரப்பரிசோதகர் ஆகியோரிடம் அறிவிக்க வேண்டும.இவர்கள்; இனங்காணப்பட்டு அன்டிஜன் பரிசோதனை செய்தல்,வெளி இடங்களில் இருந்து மருதமுனை கடற்கரைக்கு வருகின்றவர்களைக் கட்டுப்படுத்தல்,வர்த்தக நிலையங்களுக்கு வருகின்ற பொது மக்களை மட்டுப்படுத்தல்,கடற்கரைப் பிரதேசத்தில் புதிதாக கடைகள் வைப்பதையும் தடைசெய்தல்,தேவையற்ற வகையில் வீதிகளில் சுற்றித்திரிகின்ற இளைஞர்களை கட்டுப்படுத்தல் கட்டுப்படாதவர்களுக்கு எதிராக பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுத்தல் அவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுதல்,.
மேலும் அயல் கிராமங்களில் இருந்து மருதமுனை கடற்கரைக்கு வருகின்றவர்களின் வருகையைத் தவிர்த்துக்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை அந்தந்த கிராம பள்ளிவசல்கள் ஊடாகத் தெரியப்படுத்துதல்;;,இவற்றை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக பொலிஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுத்தல் பொன்ற தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.இந்தத் தீர்மானங்களை துண்டப்பிரசுரத்தின் மூலமும்.ஒலிபெருக்கிகள் மூலமும் அறிவித்தல் மேற்படி தீர்மானங்களை முன்னெடுப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பொலிஸாரும்.இராணுவத்தினரும்.சுகாதாரப் பரிசோதகர்களும், கொரோனா தடுப்புச் செயலணி உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இங்கு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி உரையாற்றுகையில்:-கொரோனாவின் மூன்றாவது அலை மிகவும் மோசமாகப் பரவிவருகின்றது.பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.நாளாந்தம் பலர் உயிரிளந்து கொண்டிருக்கின்றார்கள்.ஒவ்வொருவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி ஒன்று கூடல்களைத் தவிர்த்து கொரோனாவில் இருந்து பாதுகாப்புப் பெறவேண்டும்.இந்த விடையத்தில் நாங்கள் அலட்சியமாக இருந்தால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக அமைந்து விடும்.

எனவே வர்த்தகர்கள் தங்கள் வர்த்த நிலையங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதிப்படுத்துங்கள், கைகளைக் கழுவச்செய்யுங்கள்,இடைவெளியைப் பேணச் செய்யுங்கள் உங்கள் வர்த்தக நிலையங்களுக்குள் சமூக இடைவெளியைப் பேணச்செய்யுங்கள்,இது பெருநாள் காலம் என்பதால் நெரிசல் அதிகமாக இருக்கும் வாடிக்கையாளர்களை மட்டுப்படுத்துங்கள் இல்லையேல் இந்தக் கொரோனாவில் நாம் தப்ப முடியாது எனத் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :