க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஹாபிஸ் நசீர் எம்பி பாராட்டுஎஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர், காத்தான்குடி,கோறளைப்பற்று மேற்கு கோட்டங்களிலிருந்து க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றில் சாதனை படைத்து மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், கலை,வர்த்தகம் போன்ற துறைகளில் சிறந்த அடைவு மட்டத்தினை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகவுள்ள மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அத்துடன் இப்பரிட்சையில் உரிய அடைவினை பெற தவறிய மாணவர்கள் தொடர் முயற்சியை மேற்கொண்டு வெற்றியடையவும் பிரார்த்திக்கின்றேன்.

இப்பரீட்சை நடைபெற்ற சூழ்நிலையானது இலங்கை உட்பட உலகலாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோணா தொற்று நோயினால் கல்வித்துறை உட்பட பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையிலும் சிறந்த பெறுபேற்று அடைவு மட்டத்தினை பெற்றது உண்மையில் போற்றத்தக்கதாகும்.
இதற்காக உழைத்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அதிகாரிகள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டினையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :